×

சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை கலெக்டர் எச்சரிக்கை பொதுஇடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாடாலூர் அருகே இரூர் அரசு பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம்

பாடாலூர்:ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் இரூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு, பள்ளித் தூய்மை, கூடுதல் வகுப்பறைகள், தண்ணீர் வசதி, காய்கறி தோட்டம் அமைத்தல், இலவச நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் ஆலத்தூர் ஒன்றியத்தில் செயல்படும் தொடக்க, நடுநிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை கலெக்டர் எச்சரிக்கை பொதுஇடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாடாலூர் அருகே இரூர் அரசு பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Badalur ,Padalur ,Panchayat Union Primary School ,Irur ,Alatur taluka ,Perambalur ,Alathur ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில்...