×

சாலையோர வியாபாரிகள் பிரச்னைகளுக்கு தீர்வு

பெரம்பலூர்:வெண்டர் கமிட்டியைக் கூட்டி சாலையோர வியாபாரிக ளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற் றும் விற்பனையாளர் தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலக கூட்ட அரங் கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலை மை வகித்தார். இந்த கூட் டத்தில் பெரம்பலூர் மாவ ட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் தொழிலாளர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் வரதராஜ் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ரெங்கராஜூ, மாவட்ட பொருளாளர் யுவராஜா ஆகியோரது முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி சிலை தென்புறம் 30க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் அவ்வப்பொழுது சாலையோர வியாபாரிகளுக்கு அருகில் உள்ள பெரும் கடைக்காரர் கள் தொந்தரவு கொடுத்து பொய்யான தகவல்களை அளித்து சாலையோர வியாபாரிகளை அகற்றிவிட்டு தமது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கோடு, சாலையோர வியாபாரிகளை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்து வருகின்றனர். ஆகையால் காந்தி சிலைக்கு தென்புறம் உள்ள பல வண்டிகள் நிறுத்தும் பகுதியில் சிமெண்ட் கல் பதித்து தருமாறு கேட்டுக்கொள்கி றோம். இந்தப் பிரச்னை குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடமும் முறையிட்டு உள்ளோம். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளின் நலன்களைப் பாதுகாக்குமாறும், வெண்டர் கமிட்டியை கூட்டி சாலையோர வியாபாரிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post சாலையோர வியாபாரிகள் பிரச்னைகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Vendor Committee ,Perambalur District ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை