×

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு கூட்டம் வெள்ளம் பாதிப்பு பகுதி மக்களை தங்க வைக்க தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர்:வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி மக்களை தங்க வைக்க தற்காலிக முகாம்கள், பள்ளி கட்டடங்கள், திரு மண மண்டபங்கள், சமுதா யக் கூடங்கள் தயார் நிலை யில் வைத்திருக்க வேண் டும். பெரம்பலூரில் நடை பெற்ற தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை வகித்து பேசியதாவது :

தென்மேற்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், உடமைகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந் து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை வெள்ள காலத் தில் வெள்ளம் ஏற்பட வாய் ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்க ளை முன்கூட்டியே பாதுகா ப்பாக தங்க வைக்க ஏது வாக தற்காலிக முகாம்க ளை ஏற்படுத்த வேண்டும். வட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி கட்டடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையி ட்டு அவற்றின் உறுதித்தன் மை குறித்து ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை காலங்களில் சுகாதாரத்து றையினர் போதுமான அள வில் அத்தியாவசிய உயிர் காக் கும் மருந்துகளை இரு ப்பு வைத்திருக்க வேண் டும். வட்டார அளவில் மருத் துவ குழுவினரை சுழற்சி முறையில் 24 மணி நேர மும் தயார் நிலையில் வை த்திருக்க வேண்டும்.

இயற் கை இடர்பாடு ஏற்பட்டு மின்சார கம்பிகள் அறுந்து விழும் சூழல் உருவானால் அவற்றை யாருக்கும் பாதி ப்பின்றி உடனடியாக அப்பு றப்படுத்தவும், தடையின்றி சூழ்நிலைக்கு ஏற்றவாறு மின் விநியோகம் செய்திட வும் மின்சார வாரிய அலு வலர்கள் மற்றும் பணியா ளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் நீர்நி லைகளில் பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் குளிப்பதையோ, செல்பி புகைப்பட ங்கள் எடுப்பதையோ தவி ர்க்க அறிவுறுத்தியும், நீர்நி லைகளில் ஆழமான பகுதி கள் குறித்து விழிப்பு ஏற்ப டுத்தவும் நீர்நிலைகளின் கரைகளில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வே ண்டும். பேரிடர் காலங்க ளில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பாதி ப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அ றைக்கு 1077 என்ற எண்ணி லும், 18004254556 என்ற எ ண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம் என்ற விபரத்தை பொ துமக்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் நகரா ட்சி ஆணையர்(பொ) ராதா, முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் பாரதி வளவன், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு கூட்டம் வெள்ளம் பாதிப்பு பகுதி மக்களை தங்க வைக்க தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Perambalur Collector ,South West ,Perambalur ,Thiru Manadapals ,Samuda ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...