×

இலவச மின்சாரம் பெற்றுத்தந்த விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி

 

அவிநாசி, ஜூன் 20: இலவச மின்சாரம் பெற்றுத்தந்த விவசாய தியாகிகளுக்கு, பல்வேறு விவசாய அமைப்புகளின் சார்பில், பெருமாநல்லூரில் நேற்று 53-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவிநாசி அருகே பெருமாநல்லூரில், ஒரு பைசா மின் கட்டண உயர்வை கண்டித்தும், இலவச மின் சாரத்திற்காகவும் பெருமாநல்லூரில் விவசாயிகளின் சங்கம் சார்பில் 19.06.1970. அன்று, விவசாயிகள் போராட்டத்தில், ஈடுபட்டனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், புதுப்பாளையம் ராமசாமி, வாரணாசிபாளையம் மாரப்பகவுண்டர், ஈச்சம்பாளையம் ஆயிக்கவுண்டர் ஆகிய 3 விவசாய பலியானார்கள்.அதன்பின்னர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கப்பெற்றது.

The post இலவச மின்சாரம் பெற்றுத்தந்த விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Perumanallur ,
× RELATED அவிநாசி அரசு கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு