×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்

 

திருப்பூர், ஜூன். 20: கோவை, திருப்பூர் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் கவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்க விளைவுகளுமின்றி செய்யப்படும்.

The post திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : family surgery camp ,Tirupur Government Hospital ,Tirupur ,Coimbatore, Tirupur District ,Deputy Director of ,Welfare ,Gowri ,Modern Family Welfare Surgery Camp for ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...