×

கோடியக்கரை வனப்பகுதியில் பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மூலிகை வனம் மற்றும் வனவிலங்கு சரணாலயம் பகுதிகளில் கொன்றை மரங்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொன்றை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கும். மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் இந்த மலர்கள் சரம் சரமாக தொங்குவதால் இதனை சரக்கொன்றை என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சில மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில் பூக்கள் மட்டும் மஞ்சள் வண்ணத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இந்த கொன்றை மலர்களை இப்பகு மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து அருகில் இருந்து புகைப்படங்கள் செல்பிஎடுத்து செல்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு வீசிய காஜா புயலால் இந்த மரங்கள் பெரிதும் சேதம் அடைந்தன. இந்நிலையில் மீண்டும் வளர்ந்து அந்த மரங்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. சில மரங்கள் காய்க்க தொடங்கி உள்ளது. இதன் காய்கள் பார்ப்பதற்கு முருங்கைக்காய் போல் நீண்டு இருக்கும். இதன் பூ,இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையதாகும். சங்ககாலம் தொட்டு பல சிறப்புகளை பெற்ற அந்த மஞ்சள் நிற கொன்றை மலர்கள் கோடியக்கரை வனப்பகுதியில் மஞ்சள் போர்வை விரித்தால் போல எங்கும் காணப்படுவது இயற்கை ஆர்வலர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post கோடியக்கரை வனப்பகுதியில் பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Kodiakarai forest ,Nagapattinam ,Vedaranyam ,Kodiyakarai ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...