×

ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு கஞ்சா போதையில் தகராறு: வாலிபருக்கு பாட்டில் குத்து

 

பள்ளிப்பட்டு: கஞ்சா போதையில் வாலிபரை வயிற்றில் பாட்டில் குத்தியவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் துளசி(21). இவர், நேற்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நடுபாலாபுரத்தை சேர்ந்த அன்பு என்பவரது மகன் குமரேசன்(21), அவரது நண்பர்கள் கீழ்பாலாபுரம் சேர்ந்த மஞ்சுநாதன், செந்தமிழன், பிரபாகரன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் குமரேசன் கையில் வைத்திருந்த பாட்டில் உடைத்து துளசியின் வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு தப்பிச் சென்ற விட்டனர். அக்கம் பக்கத்தினர் துளசியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துளசி மருத்துவம்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து குமரேசன் உட்பட 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு கஞ்சா போதையில் தகராறு: வாலிபருக்கு பாட்டில் குத்து appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,Pallipatu ,Balapuram Arundhati Colony ,Bustle ,Dinakaran ,
× RELATED தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில்...