×

கூடுவாஞ்சேரியில் தாசில்தார், நகராட்சி அலுவலகம் கட்டிட பணிகளுக்கு இடையூறாக விபத்தில் சிக்கிய வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் அரசு கட்டிட பணிகளுக்கு இடையூறாக விபத்தில் சிக்கிய வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மன்ற கமிஷனர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நகர மன்ற கமிஷனர் இளம்பரிதி நிருபர்களிடம் கூறுகையில், ‘கூடுவாஞ்சேரியில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை ஒட்டியபடி அரசு பயணியர் விடுதி வளாகம் உள்ளது. இங்கிருந்த பழமை வாய்ந்த அரசு பயணியர் விடுதியை அகற்றிவிட்டு அதில் தற்போது நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக கட்டிடமும், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் மேற்படி கட்டிட பணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை அப்புறப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஏற்கனவே பலமுறை கடிதம் கொடுத்துவிட்டேன். ஆனால், இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், மேற்படி கட்டிட பணிகளை செய்ய முடியாமல் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post கூடுவாஞ்சேரியில் தாசில்தார், நகராட்சி அலுவலகம் கட்டிட பணிகளுக்கு இடையூறாக விபத்தில் சிக்கிய வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Kuduvanchery ,Kuduvancheri ,Nandivaram-Kudovancheri ,tehsildar ,Dinakaran ,
× RELATED நந்திவரம் – கூடுவாஞ்சேரி...