×

எடை குறைவான குழந்தைகளுக்கு சத்துமாவுடன் ஊட்டச்சத்து பிஸ்கட்

கரூர்: கரூர் அருகே தாந்தோணி ஒன்றிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடியில் மிக எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவுடன் கூடுதலாக செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பிஸ்கட் பாக்கெட்களை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் பாக்கெட் வழங்கி கலெக்டர் பிரபு சங்கர் பேசியதாவது: கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஒன்றியம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மிக எடை குறைவான அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவுடன் கூடிய செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இந்த ஊட்டச்சத்து பிஸ்கட் 6 முதல் 24 மாதம் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 4 பிஸ்கட் வீதம் 60 கிராம் அளவு கொண்ட ஊட்டச்சத்து பிஸ்கட், மாதத்தில் 25 நாட்களுக்கு 1,500 கிராம் வழங்கப்படவுள்ளது. அதேபோல், 2 முதல் 6 வயது எடை குறைவாக உள்ள குழந்தைகளுககு நாள் ஒன்றுக்கு 1 பாக்கெட் பிஸ்கட் வீதம், 30 கிராம் அளவு கொண்ட ஊட்டச்சத்து பிஸ்கட், மாதம் 25 நாட்களுக்கு 750 கிராம் வழங்கப்படவுள்ளது. அங்கன்வாடி மையத்தில் எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலையை அதிகரிப்பதற்காக செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்திதற்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பிஸ்கட் பாக்கெட்டுக்கள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் குறள்செல்வி, கரூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயபிரதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post எடை குறைவான குழந்தைகளுக்கு சத்துமாவுடன் ஊட்டச்சத்து பிஸ்கட் appeared first on Dinakaran.

Tags : Karur ,Anganwadi Center ,Dandoni Union ,Anganwadi ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது