×

மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி

வேளச்சேரி: மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் சம்சுதீன் (28). கோவிலம்பாக்கத்தில் ஒரு தனியார் சிமென்ட் குடோனில் தங்கியிருந்து, சிமென்ட் மூட்டைகளை ஏற்றி இறக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை சிமென்ட் குடோனின் மேற்பகுதியில் இருந்த பெயர்பலகையை சரிசெய்தபோது உயர் அழுத்த மின்கம்பியில் கை உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Sheikh Samsuddin ,West Bengal ,Kovilambakkam ,
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ...