×

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசு வழங்கி பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு பிவிசி குழு சார்பில் கிளை செயலாளர் வினோத்குமார் ஒருங்கிணைப்பில் மின்னொளி கைப்பந்து போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், ஒன்றிய அவைத் தலைவர் சிற்றம் சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார், சரவணன், கௌரி பாண்டுரங்கன், சிலம்பரசன், புருஷோத்தமன், வைஷ்ணவிபாபு, லோகையா, நடராஜன், சர்தார், நெல்சன்முத்து, தாமோதரன், மோகன், கோடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மின்னொளி கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பையை வழங்கி பாராட்டினார். இதில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.20,000, கோப்பை, 2ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.15,000, 3ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.10,000 வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.

The post எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசு வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Electronic Volleyball Tournament ,Edappadi Palaniswami ,Former Minister ,B.V.Ramana ,Tiruvallur ,AIADMK ,General Secretary ,Perambakkam, Tiruvallur District ,Kadambatur Union ,
× RELATED முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி