×

மரக்கிளை விழுந்து காயம் அடைந்த பெண் காவலரின் கணவர் பலி

சென்னை: மரக்கிளை முறிந்து விழுந்து காயம் அடைந்த பெண் காவலரின் கணவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னை கொருக்குபேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பெண் காவலராக சுகப்பிரியா பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி காலை சுகப்பிரியா தனது கணவர் ஆனந்தராஜ் உடன் ஸ்கூட்டரில் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தார். வேப்பேரி ஈவிஆர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்ற போது, திடீரென சாலையோரம் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் ஆனந்தராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பெண் காவலரான சுகப்பிரியாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த ஆனந்தராஜ் மற்றும் சுகப்பிரியாவை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆனந்தராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆனந்த்ராஜ் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மரக்கிளை விழுந்து காயம் அடைந்த பெண் காவலரின் கணவர் பலி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Korukuppet ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்