×

வள்ளியூரில் ரூ.1.10 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்

வள்ளியூர்,ஜூன் 20: வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நேற்று நடந்தது. இதில் வள்ளியூர் ஒன்றிய சேர்மன் சேவியர் செல்வராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், முத்தையா, ஒன்றிய பொறியாளர் கணபதி ராமன், ரமேஷ், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.10 கோடியில் மககள் நலப்பணிகள் மேற்கோள்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார், டெல்சி ஒபிலியா, கொசிஜின், ஜெயா, மகாலெட்சுமி, மல்லிகாஅருள், பாண்டித்துரை, சாரதா, ஜெயலெட்சுமி, அனிதா, அஜந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வள்ளியூரில் ரூ.1.10 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Tags : Valliyur ,Xavier Selvaraja ,Dinakaran ,
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது