×

500 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது இண்டிகோ

மும்பை: இண்டிகோ நிறுவனம் சார்பில் 500 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து இருக்கிறது. ஒன்றிய அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துக்குச் சொந்தமான பின்னர் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் வாங்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. மொத்தம் 470 விமானங்கள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டது. தற்போது ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 விமானங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. தற்போது, ​​இண்டிகோ 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. இதுபற்றி இண்டிகோ நிறுவனம் கூறுகையில்,’2030-2035ம் ஆண்டில் இயக்க வசதியாக கூடுதலாக 500 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 480 விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டு இருந்தது. அது இன்னும் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 விமானங்கள் இண்டிகோவில் இணைய உள்ளன. இந்த விமானங்கள் ஏ320 நியோ, ஏ321 நியோ, ஏ321 எக்ஸ்எல்ஆர் இன்ஜின்களை கொண்டு இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஏர்பஸ் நிறுவனத்திற்கு இண்டிகோ போல் இதுவரை எந்த விமான நிறுவனமும் இத்தனை மிகப்பெரிய ஆர்டரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

The post 500 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது இண்டிகோ appeared first on Dinakaran.

Tags : IndiGo ,Airbus ,Mumbai ,Dinakaran ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...