×

53வது பிறந்த நாள் ராகுல்காந்திக்கு மம்தா, நிதிஷ்குமார் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மம்தா, நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 53வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: ராகுலுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான உங்கள் தளராத அர்ப்பணிப்பும், துன்பங்களை எதிர்கொள்ளும் உங்கள் அடங்காத தைரியமும் போற்றத்தக்கது. நீங்கள் தொடர்ந்து அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவதோடு, கருணை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைப் பரப்பும் அதே வேளையில், கோடிக்கணக்கான இந்தியர்களின் குரலாக இருங்கள்.

* மேற்குவங்க முதல்வர் மம்தா: ராகுல் காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், அற்புதமான ஆண்டும் அமைய வாழ்த்துக்கள். பீகார் முதல்வர் நிதிஷ்குமார்: ராகுல்காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்துகிறேன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவை இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க யாத்திரையை மேற்கொண்டு நாட்டில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்ற செய்தியை பரப்பிய மக்கள் தலைவரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

* சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்: உங்களின் திறமையான தலைமை, சமூகப் பாதுகாப்பின் இலக்கை நிறைவேற்றும் வலிமையை எங்களுக்குத் தருகிறது. ஒன்றிய அரசிடம் அச்சமின்றி கேள்வி எழுப்பி கோடிக்கணக்கான மக்களுக்கு பலம் அளிக்கும் ராகுல் காந்திக்கு எங்கள் அனைவரின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா: உங்களின் தைரியம் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பலத்தை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

* இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு: ராகுல்காந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்: இந்த மகிழ்ச்சியான நாள் சகோதரர் ராகுல்காந்தி வாழ்வில் மீண்டும் மீண்டும் வரவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவானாக. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: எனது நண்பர் ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொண்டு, வெறுப்புக்கு அன்புடன் பதிலளித்துள்ள நீங்கள், தொடர்ந்து மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். இவர்கள் தவிர சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

The post 53வது பிறந்த நாள் ராகுல்காந்திக்கு மம்தா, நிதிஷ்குமார் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Mamata ,Nitish Kumar ,Rahul Gandhi ,New Delhi ,president ,Congress party ,Nitishkumar ,
× RELATED பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும்...