×

ஜெலன்ஸ்கிக்கு பர்பி வழங்கிய ரிஷி சுனக்

லண்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தனது தாயார் தயாரித்த பர்பி வழங்கியதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். இவர் பிரதமராக பதவியேற்றது முதல் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கு ராஜாங்க அடிப்படையிலும் ராணுவ ரீதியாகவும் உதவிகளை அளித்து வருகிறார். கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். அப்போது போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அனைத்து நாடுகளும் உதவ வேண்டும் என சுனக் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஜெலன் ஸ்கி இங்கிலாந்துக்கு வந்த போது அவருக்கு தன்னுடைய தாயார் தயாரித்த பர்பியை வழங்கியதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது தொடர்பான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், சமீபத்தில் ஜெலன்ஸ்கி என்னை சந்திக்க லண்டன் வந்திருந்த போது மிகவும் பசியாக இருப்பதாக கூறினார். இதையடுத்து என்னுடைய தாயார் உஷா வீட்டில் தயாரித்த பர்பிகளை வழங்கினேன். அதை உண்ட ஜெலன்ஸ்கி அது மிகவும் சுவையாக இருந்தது என பாராட்டினார் என தெரிவித்துள்ளார்.

The post ஜெலன்ஸ்கிக்கு பர்பி வழங்கிய ரிஷி சுனக் appeared first on Dinakaran.

Tags : Rishi Sunak ,Zelensky ,London ,President Zelensky ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை