×

ஆஸி.க்கு 281 ரன் இலக்கு

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன் இலக்கு நிணயிக்கப்பட்டது/ எட்ஜ்பாஸ்டன் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 118, பேர்ஸ்டோ 78, கிராவ்லி 61 ரன் விளாசினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கவாஜா 141 ரன், ஹெட் 50, கேரி 66, கிரீன், கம்மின்ஸ் தலா 38 ரன் எடுத்தனர். இதையடுத்து, 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்த நிலையில், கனமழை காரணமாக 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 273 ரன் குவித்து 2வது இன்னிங்சை இழந்தது. ரூட், புரூக் தலா 46, கேப்டன் ஸ்டோக்ஸ் 43, ராபின்சன் 27, பேர்ஸ்டோ 20, டக்கெட், மொயீன் தலா 19 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ், லயன் தலா 4, ஹேசல்வுட், போலண்ட் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி. களமிறங்கியது.

The post ஆஸி.க்கு 281 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Aussies ,Birmingham ,England ,Australia ,Edgbaston Arena ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை