×

அல்டிமேட் டிடி ஜூலை 13ல் தொடக்கம்

மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடரின் 4வது சீசன் புனேவில் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் சென்னை லயன்ஸ், பெங்களூர் ஸ்மாஷர்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான் அணிகள் களமிறங்குகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை லயன்ஸ், உள்ளூர் அணியான புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று ஜூலை 27ல் நிறைவடையும் நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 28, 29லும், பைனல் ஜூலை 30ம் தேதியும் நடைபெறும். நடப்பு தொடருக்கான 18 ஆட்டங்களும் புனேவில் மட்டுமே நடத்தப்பட உள்ளன. தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டங்கள் ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும். இந்த தொடரில் சர்வதேச வீரர்களான சரத் கமல், மனிகா பத்ரா, சத்தியன் ஞானசேகரன் (இந்தியா) ஆகியோருடன் குவாட்ரி அருணா (நைஜீரியா), லில்லி ஜாங் (அமெரிக்கா) உள்ளிட்ட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

The post அல்டிமேட் டிடி ஜூலை 13ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Ultimate Table ,Tennis ,UTD ,Pune ,Chennai ,Dinakaran ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...