×

காந்தி விருதுக்கு தேர்வு கீதா பதிப்பகத்திற்கு அமித் ஷா பாராட்டு: காங். எதிர்ப்பு

புதுடெல்லி: சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கடந்த 1995ம் ஆண்டு முதல் காந்தி அமைதி விருதை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்திற்கு வழங்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாக கீதா பதிப்பகத்தை தேர்வு செய்து அறிவித்தது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘‘ கீதா பதிப்பகம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, பல புனித நூல்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் அற்புதமான பணியைச் செய்து வருகிறது’’ என புகழ்ந்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘இந்த விருது தருவது கோட்சே, சாவர்க்கருக்கு தருவதற்கு சமம்’’ என எதிர்த்துள்ளார்.

The post காந்தி விருதுக்கு தேர்வு கீதா பதிப்பகத்திற்கு அமித் ஷா பாராட்டு: காங். எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Geetha Publishing ,Gang ,New Delhi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…