×

தனி நீதிபதி உத்தரவிட்டபடி கோயில்களில் இனி யானை வாங்க கூடாது என்பதற்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ‘கோயில்களுக்கு இனிமேல் யானைகள் வாங்கக் கூடாது’ என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஷேக் முகம்மது வளர்த்த லலிதா என்ற பெண் யானை கடந்த பிப்ரவரி மாதம் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடல் நிலை பாதித்து மயங்கி விழுந்தது. இதையடுத்து ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் இனி யானைகள் வாங்கக் கூடாது” என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அறநிலையத்துறையின் கருத்துக்களை கேட்காமலேயே தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, தனி நீதிபதி உத்தரவு ஏற்புடையதல்ல’’ என்றார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post தனி நீதிபதி உத்தரவிட்டபடி கோயில்களில் இனி யானை வாங்க கூடாது என்பதற்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Madurai ,IC Court branch ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...