×

சதம் தொட்டார் சீனிப்பாட்டி; 5 தலைமுறை குடும்பத்தினருடன் பர்த்டே பார்ட்டி: ‘இயற்கை உணவு முறையே காரணமாம்’

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இறந்து விட்டார். மனைவி சீனியம்மாள்(100). இவருக்கு 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன், ஒரு மகள் இறந்து விட்டனர். சீனியம்மாளுக்கு நேற்று 100வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து தற்போது தேனியில் வசித்து வரும் இக்குடும்பத்தினர், நேற்று சொந்த ஊரான நத்தம் அருகே லிங்கவாடியில் உள்ள வீட்டிற்கு வந்தனர். பின்னர் 6 தலைமுறை குடும்ப உறுப்பினர்கள் 85 பேர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சீனியம்மாளின் 100வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர்ந்து உறவினர்கள், ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சீனியம்மாள் சிறுவயது முதல் தற்போது வரை சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் முழுமையாக கீரை வகை, பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி என ஆரோக்கியமான உணவுகளை உண்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த தள்ளாத வயதிலும் சீனியம்மாள் தினந்தோறும் சமையல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சதம் தொட்டார் சீனிப்பாட்டி; 5 தலைமுறை குடும்பத்தினருடன் பர்த்டே பார்ட்டி: ‘இயற்கை உணவு முறையே காரணமாம்’ appeared first on Dinakaran.

Tags : Sinipatty ,Nattam ,Meenakshisundaram ,Lingavadi ,Nattam, Dindigul district ,Seniyammal ,Seenipatti ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...