×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர்: பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் என்ன பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் கூடி அம்மனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக நள்ளிரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இந்நிலையில் ஆனி அமாவாசை தினமான நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் வந்திருக்கு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் நள்ளிரவில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மன் பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் பூசாரிகள் மேள தாளங்கள் முழங்க அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடினர். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மா தாயே, அருள் புரிவாயே என பக்தி பரவசத்துடன் வணங்கினர். விழுப்புரம், செஞ்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊஞ்சல் உற்சவத்தின்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், மேலாளர் மணி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு வளத்தி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ani Month New Moon ,Anangalamman Temple ,Mellayanur ,Sami Vise ,Ani ,Malayanur ,Anangalamman Thirukoil ,Melayanur ,Sami ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...