×

கோடை மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு; மொத்த உற்பத்தியும் சேதமடைந்ததாக உற்பத்தியாளர்கள் வேதனை..!!

நாகை: கோடை மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்டிருந்த உப்பும் மழைநீரில் கரைந்துவிட்டதால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பை உற்பத்தியாளர்கள் தார்பாய் கொண்டு பத்திரமாக மூடி வைத்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான உப்பு மழைநீரில் கரைந்து வீணாகிவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வாரத்திற்கு மேலாகும் என்பதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். திடீரென பெய்த கோடை மழையால் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்களும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

The post கோடை மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு; மொத்த உற்பத்தியும் சேதமடைந்ததாக உற்பத்தியாளர்கள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Vedharan ,Nagai ,Vedaran ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...