×

செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

கோலா உருண்டை செய்வதற்கு..

துவரம் பருப்பு – 1 கப்
வரமிளகாய் – 4
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
இஞ்சி – 1 இன்ச் (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பிரியாணி இலை – 1
தக்காளி – 5 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை கழுவி, நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். துவரம் பருப்பு ஊறியதும், மிக்சர் ஜாரில் துவரம் பருப்பு, பட்டை, சோம்பு, வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து, அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் அந்த உருண்டைகளை வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, வெந்தயம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 1 நிமிடம் நிறம் மாறும் வரை வதக்கியதும் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பின் புளிச்சாற்றினை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு தயார்.

The post செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு appeared first on Dinakaran.

Tags : Chetinadu ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...