×

உலகின் வெரி காஸ்ட்லி ஐஸ்கிரீம் பையாகுயா

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவுப்பொருள் ஐஸ்கிரீம். அதிலும் கோடை விடுமுறையில் விதவிதமான ஐஸ்கிரீமை ருசிப்பதற்கு பலரும் விரும்புவார்கள். இதன் காரணமாகவே சமீபத்தில், ஜப்பான் நாடு மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமை தயாரித்திருக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த செல்லாடோ என்ற நிறுவனம்தான் உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள பையாகுயா (Byakuya) என்ற ஐஸ்கிரீமை உருவாக்கி உள்ளது. இந்த ஐஸ்கிரீமின் சுவை ரகசியம் என்னவென்றால், அதற்கான பிரதான மூலப்பொருள் இத்தாலியில் இருந்து வரவழைக்கப்படுகிறது என்பதுதான். அங்குள்ள ஆல்பா நகரப் பகுதியில் வளர்க்கப்படும் ‘ஒயிட் ட்ருப்பிள்’ எனப்படும் அரிய வகை வெள்ளை அரிசி இதில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

மேலும், தங்க இழைகள், ஜிஞ்சோ இன்சென்ஸ், பர்மேசன்-ரெஜியானோ பாலாடைக்கட்டி, சேக் லீஸ் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மிகவும் அரிதான வெள்ளை பச்சரிசி இதில் பயன்படுத்தப்படுவதால் இதனை வெள்ளை வைரம் என்றும் அழைக்கின்றனர். அந்த அரியவகை அரிசியின் விலை மட்டும் ஒரு கிலோ ரூ.11.9 லட்சமாம். அதிக விலை மதிப்புள்ள ஐஸ்கிரீம், தனித்துவம் மிக்க உலோக ஸ்பூன் மூலம் வினியோகிக்கப்படும். கஜரிகனாகு டேக்குச்சி என்ற அலங்கார பொருட்கள் உற்பத்தி நிறுவனம் இந்த உலோக ஸ்பூனை தயாரிக்கிறது. இதில் புஷிமி, கியோட்டோவில் உள்ள கோயில்களில் பின்பற்றப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்பூன் தயாரிக்கப்படுகிறது.பல விடாமுயற்சிகளுக்குப் பிறகு, சுவைமிக்க இந்த ஐஸ்கிரீமை உருவாக்க ஒன்றரை ஆண்டு காலம் ஆனதாம். தற்போது இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது இதற்கு மதிப்பளிக்கும் விதத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். இந்த ஐஸ்கிரீமின் விலை எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சத்து 54 ஆயிரம். இந்த ஐஸ்கிரீமை ருசித்தவர்கள் இதன் சுவையை விவரிக்க கடினமாக இருக்கிறது என்கிறார்கள். அந்த அளவுக்கு புதுவித சுவை உணர்வை கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

ரிஷி

The post உலகின் வெரி காஸ்ட்லி ஐஸ்கிரீம் பையாகுயா appeared first on Dinakaran.

Tags :
× RELATED கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா: துரை வைகோ மரியாதை