×

உலகப் புகழ் மில்லியனர் மம்மீஸ்!

உலகிலேயே அதிக சம்பளம், அதிகம் புகழ், விருதுகள் என யுனிவர்சல் இன்ஸ்பிரேஷன் அன்னைகளாக இருக்கும் மில்லியனர் மம்மீஸ்

7.மெலிசா ஆன் மெக்கார்த்தி (வயது 52)

அமெரிக்க நடிகை, நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர். இரண்டு பிரைம் டைம் எம்மி விருதுகள் மற்றும் இரண்டு அகாடமி விருதுகள் மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகள் உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றவர். மெக்கார்த்தி தனது நீண்டகால காதலர், நடிகர், மற்றும் தி கிரவுண்ட்லிங்ஸ் உறுப்பினருமான பென் ஃபால்கோனை அக்டோபர் 8, 2005 அன்று மணந்தார், மெலிசாவிற்கு விவியன் மற்றும் ஜார்ஜெட் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் சம்பளம் ஒரு படத்திற்கு 25 மில்லியன், அதாவது 200 கோடியாம். இன்ஸ்டாகிராமில் 11மில்லியன் ஃபாளோயர்கள் கொண்டவர் மெலிசா.

6.ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ் (எ) ஜெனிபர் லாரன்ஸ்
(வயது 32)

அமெரிக்க நடிகை, இவர் 22 வயதில், காதல் நகைச்சுவை கலந்த ’சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ திரைப்படத்தில் நடித்து ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, சேட்டிலைட் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருது போன்ற விருதுகளைப் பெற்றார். எக்ஸ்: மென் பாகங்கள், தி ஹங்கர் கேம்ஸ் பாகங்கள், உள்ளிட்ட உலகப் புகழ் ஹாலிவுட் படங்களில் மாஸ் காட்டியவர். ரூ. 230 கோடி சம்பளம் வாங்கும் நடிகை. அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கண்காட்சி இயக்குநர் கூக் மரோனீயுடன் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்ட ஜெனிபர் லாரன்ஸ்க்கு சை என்னும் ஆறு மாதக் குழந்தை இருக்கிறார்.

5.ஜூலியா ராபர்ட்ஸ்
(வயது 56)

மூன்று ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுக்குச் சொந்தக் காரர். ஹாலிவுட்டின் டாப் நடிகை. இவர் நடிப்பில் படங்கள் வெளியாகிறது என்றாலே அந்தக் கதைக்காக நம்மூர் முதல் பல நாட்டு இயக்குநர்களும் காத்திருப்பார். பெரும்பாலும் ஹீரோயின் அடிப்படையிலான கதை என்றாலே ஜூலியோ ராபர்ஸ் தான் இயக்குநர்களின் சாய்ஸ். அமெரிக்க ஒளிப்பதிவாளர் டேனியல் மோடெரை 2வது திருமணம் செய்துகொண்ட ஜூலியோ ராபர்ஸ்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ரூ.250 கோடி சம்பளம் பெறும் ஜூலியோ ராபர்ட்ஸ் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் ஹிட்டானவை.

4.கல் கடோத்
(வயது 38)

‘ஒண்டர் வுமன்’ என உலக அளவில் செல்லமாக அழைக்கப்படும் கல் கடோத் ‘ஒண்டர் வுமன்’ படம் நடிக்கும் தறுவாயில் வயிற்றில் தனது 3வது குழந்தையுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ் பெற்ற சூப்பர் ஹீரோயின். 18 வயதில் மிஸ்.இஸ்ரேல் பட்டம் பெற்ற கல் கடோத் இஸ்ரேல் தொழிலதிபர் ஜாரோன் வர்சனோவைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். முறையே 2011, 2017, மற்றும் ‘ஒண்டர் வுமன்’ படத்தின் படப்பின் போது பிறந்த மகள் 2021லும் பிறந்துள்ளனர். ரூ.260 கோடி சம்பபளம் வாங்கு கல் கடோத் டிசி காமிக்ஸ் உலகின் ராணி என்றாலும் மிகையாகாது.

3.ஏஞ்சலினா ஜோலி
(வயது 47)

இன்று மாஸ் ரசிகர்கள் கொண்ட அமெரிக்க டாப் நடிகை. ஆறு குழந்தைகள் கொண்ட ஏஞ்சலினா ஜோலி ’சேஞ்சலிங்’, ‘ கேர்ள், இன் டிரெப்டட்’ உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கர் விருது உட்பட மூன்று கிராமி விருதுகளைப் பெற்றவர். இந்தியாவிலும் கூட ஏஞ்சலினாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரின் சம்பளம் ரூ. 280 கோடியாம். 14 மில்லியன் ஃபாளோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் ஏஞ்சலினாவிற்கு ஹாலிவுட் புகழ் பெற்ற நடிகர் பிராட் பிட் உட்பட மூன்று கணவர்கள். எதையும் அலட்டிக்கொள்ளாமல் தன் வாழ்வை தனக்கென அமைத்துக்கொண்ட
பெண்களில் முக்கியஸ்தர்.

2.ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் (வயது 38)

தனக்கென உலக அளவில் தனி பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் கொண்ட நடிகை. 2008ல் சுயேட்சையாக அமெரிக்க பிரதமர் பதவிக்கும் மனுதாக்கல் செய்த மாயக்காரி. இவருக்கும் அமெரிக்க நடிகர் கோலின் கெல்லி ஜோஸ்ட் உட்பட ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள். இரண்டு குழந்தைகள். புற்றுநோய்க்கான தன்னார்வலர் அமைப்புகள், உட்பட பல அமைப்புகள், மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவும் பல அமைப்புகள் என நடத்தும் ஸ்கார்லெட்டின் சம்பளம் ரூ.300 கோடியாம். இப்பேர்பட்ட நடிகை இன்ஸ்டாகிராமில் இல்லை என்பது ஆச்சர்யத் தகவல்.

1.சாண்ட்ரா புல்லக்
(வயது 58)

‘தி ஸ்பீட்’ நாயகி என செல்லமாக அழைக்கப்படும் சாண்ட்ரா. தனது காதலரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற தொகுப்பாளர் ஜெஸ்ஸி ஜேம்ஸுடன் திருமணம் செய்யப்போகும் தறுவாயில் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளானார். பின் மீண்டும் திருமணம் செய்துகொண்டு இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என முடிவெடுத்தனர். ஆனாலும் ஜேம்ஸ் மீண்டும் மீண்டும் பல பிரச்னைகள், நம்பிக்கையில்லா நிலையையே உருவாக்கிக் கொண்டே இருந்தார். ஆனாலும் தத்தெடுக்கும் முயற்சிகளை கைவிடாது, சிங்கிள் அன்னையாக ஒரு ஆண் , மற்றும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி வருகிறார். அமெரிக்காவின் பாக்ஸ் ஆபீஸ் நாயகி, மற்றும் லக்கி சார்ம் ஆக இருக்கும் சாண்ட்ராவின் சம்பளம் ரூ. 500 கோடியாம்.
– ஷாலினி நியூட்டன்

The post உலகப் புகழ் மில்லியனர் மம்மீஸ்! appeared first on Dinakaran.

Tags : Ann… ,
× RELATED விம்பிள்டன் பைனலில் இன்று ஆன்ஸ் – எலனா மோதல்