×

சென்னையில் மழை நீரை அகற்றும் பணி, தூர்வாரும் பணியில் 4,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் 21 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று அமைச்சர் ராமசந்திரன் பேட்டி அழித்துள்ளார். கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நிற்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை பெய்தபோதும் உயிரிழப்பு ஏதுமில்லை. பெரிய தேசம் ஏதும் இல்லை என்று அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் எந்த இடத்திலும் போக்குவரத்து பதிக்கபடாத வகையில் மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பணியாளர்களும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்றும் மழைநீர் வடிகால் பணிகள் 80% அளவுக்கு முடிந்துள்ளதால் பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் மழை நீரை அகற்றும் பணி, தூர்வாரும் பணியில் 4,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் பணி நடக்கிறது. சென்னையில் தொடர்மழையால் 127 இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேக்கம் தொடர்பாக மக்களிடம் இருந்து 158 புகார்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மழை நீர் அகற்றும் பணி, தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் உள்ள 327 கழிவு நீர் உந்து நிலையங்களும் எந்த தடையும் இன்றி செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567, 1916-ல் தெரிவிக்கலாம் என்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை நீடித்து வருகிறது.

The post சென்னையில் மழை நீரை அகற்றும் பணி, தூர்வாரும் பணியில் 4,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K. K.K. S. S. R.R. Ramashandran ,Ramachandran ,Ganesapuram subway ,K. K.K. S. S. R.R. Ramachandran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்