×

விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்!: கிருஷ்ணகிரியில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.. மாவட்ட ஆட்சியர் தகவல்

கிஷ்ணகிரி: ஓசூர் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதாக விவசாயிகள் கூறிய நிலையில் மூட்டைகள் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெய்த கனமழையால் அந்திவாடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் தந் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின.

பல்வேறு ஊர்களிலிருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவது தொடர்கதையாகி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும் இடத்திற்கு மேல்கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே அந்திவாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 7660 டன் நெல் மூட்டைகள் தற்போது இருப்பு உள்ளதாகவும் அவை அனைத்தும் தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பான முறையில் மூடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அந்திவாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் இதற்கென பாதுகாப்பான கட்டடம் கட்டுவதற்கு கிருஷ்ணகிரி தாலுகாவில் 7 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும். விரைவில் அங்கு புதிய கிடங்கு கட்டப்படும் என்றும் ஆட்சியர் சரயு தெரிவித்தார்.

The post விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்!: கிருஷ்ணகிரியில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.. மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Krishnakiri. ,Kishnagiri ,Osur ,Krishnakiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...