×

தம்பிரான், மேனகா. 2 மாதங்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் நிம்மதி 97 டிகிரி வெயில் பதிவு; மிதமான மழை பொழிவு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் குறைவாக பதிவானது. அதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. மார்ச் மாதத்திலேயே கோடையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்ட கோடை வெயில் தினமும் 100 டிகிரியை கடந்து சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்ப நாட்களில் மழை கை கொடுத்ததால் பாதிப்பு குறைந்து இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிகபட்சம் 106 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த மாதம் 29ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஜூன் மாதத்திலும், கோடை வெயியி சுட்டெரித்ததால், பொதுமக்கள் அவதி அடைந்திருந்தனர்.

இந்நிலையில், வெயிலின் தாக்கம் இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று வெயிலின் தாக்கம் வெகுவாக தணிந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் குறைந்ததால் நேற்றைய வெயிலின் அளவு 97 டிகிரியாக பதிவானது. மேலும், நேற்று பகல் முழுவதும் மழை மேகம் சூழ்ந்து இதமான நிலை காணப்பட்டது. விட்டு விட்டு லேசான மழையும் பெய்தது. எனவே, வெயிலின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைத்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

 

The post தம்பிரான், மேனகா. 2 மாதங்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் நிம்மதி 97 டிகிரி வெயில் பதிவு; மிதமான மழை பொழிவு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Dhampiran, Maneka ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Thambiran ,Maneka ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...