×

நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் சியோன் நகரில் சாலை அமைப்பு

மானாமதுரை, ஜூன் 19: மானாமதுரை சியோன் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி துவக்கி வைத்தார். மானாமதுரை நகராட்சி 27வது வார்டிற்கு உட்பட்ட சீயோன் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் சாலை வசதிகள் இல்லாததால் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது சீயோன் நகர் மக்கள் சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இந்த பணிகளின் துவக்க விழாவில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி நகராட்சி துணைத் தலைவர் பாலசுந்தரம், திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி, 26வது வார்டு கவுன்சிலர் அழகர்சாமி, 27வது வார்டு வட்டச் செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் சியோன் நகரில் சாலை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Sion ,Manamadurai ,Manamadurai Sion Nagar ,
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை