×

போக்குவரத்து போலீசாருக்கு எச்சரிக்கை பதாகைகள்

 

கம்பம், ஜூன் 19: கம்பத்தில் ரோட்டரி கிளப் ஆப் கம்பம் கிரீன்வேலி சார்பாக கம்பம் போக்குவரத்து போலீசாருக்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வழங்கும் நிகழ்ச்சி கம்பம் சிக்னல் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் கம்பம் கிரீன்வேலி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி தலைமை வகித்தார். கம்பம் நகர தலைவர் வேல்பாண்டியன் மற்றும் நகரச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள் அடங்கிய பதாகைகளை மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி மற்றும் நகர தலைவர் வேல் பாண்டியன் ஆகியோர் கம்பம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணனிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

The post போக்குவரத்து போலீசாருக்கு எச்சரிக்கை பதாகைகள் appeared first on Dinakaran.

Tags : Kampam ,Kampam Traffic Police ,Rotary Club ,Kampam Green Valley ,Kampam… ,Dinakaran ,
× RELATED செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்ட...