×

வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் லிங்கம்கோவில் ஓடைப்பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை

வத்திராயிருப்பு, ஜூன் 19: வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் லிங்கம் கோவில் ஓடை உள்ளது. சதுரகிரி மழையில் இருந்து வரக்கூடிய ஓடைவழியாக பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லும். புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால் இந்த ஓடை வழியே செல்லக்கூடிய தண்ணீரை தடுப்பணை கட்டி தண்ணீரைத் தேக்கி மழை பெய்யும் காலங்களில் அதிகமாக தண்ணீர் வரும்பொழுது தடுப்பணை வழியாக செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும். மேலும் தற்போது தடுப்பணை இல்லாததால் தண்ணீர் தேக்கம் இல்லாமல் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அத்துடன் அந்த பகுதியில் பாலத்தின் அருகில் ஓடையின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால் தண்ணீர் அதிகமாக வரும்பொழுது ஓடையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்ப்பட்டு உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பாலத்தின் அருகில் தடுப்பணை கட்டினால் தண்ணீர் தேங்கி நிற்கும்போது வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மக்கள் தடுப்பணையில் குளிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். தடுப்பணை கட்டுவதால் அந்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயரும் என்று தெரிவிக்கின்றனர்.

The post வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் லிங்கம்கோவில் ஓடைப்பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Lingamkoil ,Vathirairi ,Thaniparai ,Vathirairu ,Lingam ,Chathuragiri ,Lingamcoil ,Thanipara ,Dinakaran ,
× RELATED மகா சிவராத்திரி.. சதுரகிரி கோயிலில்...