×

போலி கால் சென்டர் மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.164 கோடி பறித்த 4 பேர் கைது

புதுடெல்லி: போலி கால் சென்டர் நடத்தி அதன்மூலம் அமெரிக்கர்களிடம் ரூ.164 கோடி பறித்த குற்றச்சாட்டில் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியா, அமெரிக்கா மற்றும் உகாண்டாவில் உள்ள சில சர்வதேச சைபர் குற்றவாளிகள் அமெரிக்க அரசு அதிகாரிகளாக தங்களை காட்டிக் கொண்டு போலி கால் சென்டர்களை நடத்தி பணம் பறித்து வருவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பார்த் அர்மார்கர் (28), வத்சல் மேத்தா (29), தீபக் அரோரா (45), பிரசாந்த் குமார் (45) உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் அமெரிக்கர்களிடம் ரூ. 164 கோடி பறித்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து சிறப்பு கமிஷனர் எச் எஸ் தாலிவால் கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் நான்கு பேரில் மேத்தா என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இந்த நபர் வெளிநாட்டில் உள்ளார். உகாண்டா மட்டுமின்றி இந்தியாவின் பல இடங்களில் போலி கால் சென்டர் நடத்தி வருகிறார். அவ்வப்போது மட்டும் இந்தியா வரும் இவர், உகாண்டா வில் உள்ள கால்சென்டரை கவனித்து வருகிறார். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.

The post போலி கால் சென்டர் மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.164 கோடி பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Americans ,New Delhi ,Delhi Police ,
× RELATED அமித் ஷா வீடியோ விவகாரம்; தெலங்கானா...