×

நேபாளத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அபார வெற்றி: ஐசிசி உலக கோப்பை தகுதி சுற்று

ஹராரே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதி சுற்று ஏ பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில், நேபாளம் அணியுடன் மோதிய ஜிம்பாப்வே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. நேபாளம் தொடக்க வீரர்கள் குஷால் புர்டெல் – ஆசிப் ஷேக் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்தனர். குஷால் புர்டெல் 99 ரன் (95 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஆசிப் 66 ரன் (100 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குஷால் மல்லா 41, கேப்டன் ரோகித் பாடெல் 31 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். நேபாளம் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன் குவித்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் ரிச்சர்ட் 4, வெலிங்டன் மசகட்சா 2, சதாரா, முஸரபானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 44.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஜாய்லார்ட் 25 ரன், வெஸ்லி மாதெவர் 32 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் கிரெய்க் எர்வின் 121 ரன் (128 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), ஷான் வில்லியம்ஸ் 102 ரன்னுடன் (70 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிரெய்க் எர்வின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகள் பெற்றது.

The post நேபாளத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அபார வெற்றி: ஐசிசி உலக கோப்பை தகுதி சுற்று appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,Nepal ,ICC World Cup ,Harare ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…