×

திருச்சியை வீழ்த்தியது சேலம் ஸ்பார்டன்ஸ்: கவுஷிக் அதிரடி அரை சதம்

திண்டுக்கல்: பால்சி திருச்சி அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பால்சி திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. மணி பாரதி அதிகபட்சமாக 40 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். டேரில் பெராரியோ 29, ரோகின்ஸ் 16, ராஜ்குமார் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

சேலம் பந்துவீச்சில் அபிஷேக் தன்வார் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சாந்து, கார்த்திகேயன் தலா 2, சச்சின், கணேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் களமிறங்கியது. அந்த அணி 15.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய கவுஷிக் காந்தி ஆட்டமிழக்காமல் 52 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினார். அமித் சாத்விக் 22, மான் பாப்னா, மோகித் ஹரிகரன் 15 ரன் எடுத்தனர். திருச்சி பந்துவீச்சில் காட்சன் 3, ஈஸ்வரன் 2 விக்கெட் எடுத்தனர். அபிஷேக் தன்வார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சேலம் ஸ்பார்டன்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post திருச்சியை வீழ்த்தியது சேலம் ஸ்பார்டன்ஸ்: கவுஷிக் அதிரடி அரை சதம் appeared first on Dinakaran.

Tags : Salem Spartans ,Trichy ,Kaushik ,Dindigul ,TNPL T20 ,Balsi Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...