×

இந்தோனேசியா ஓபன்சாத்விக் – சிராஜ் ஜோடி சாம்பியனாகி சாதனை

ஜகார்தா: இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.பைனலில் மலேசியாவின் ஆரோன் சியா – சோஹ் வூய் யிகா ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய ஜோடி 21-17, 21-18 என்ற நேர் செட்களில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. ஆரோன் – யிகா ஜோடியுடன் 11 முறை மோதியதில் சாத்விக் – சிராக் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 1000 அந்தஸ்து பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய இணை என்ற பெருமையும் சாதனையும் சாத்விக் – சிராஜ் வசமாகி உள்ளது.

The post இந்தோனேசியா ஓபன்சாத்விக் – சிராஜ் ஜோடி சாம்பியனாகி சாதனை appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Opansadvik ,Jakarta ,Indonesia Open Super 1000 badminton ,India ,Sadwiksairaj Rangretty ,Chirac ,Opansadwik ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை...