×

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் குழந்தையின் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: வெண்கல வளையல்கள், காப்புகள் கிடைத்தன

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் குழந்தையின் முதுமக்கள் தாழி கண்ெடடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒன்றிய அரசின் சார்பில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணி கடந்த ஆண்டு தொடங்கியது. அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட சிறிய முதுமக்கள் தாழி தற்போது திறக்கப்பட்டது.
அதில் ஆய்வாளர்களை ஆச்சர்யமூட்டும் விதமாக நான்கு வெண்கல வளையல்கள் இருந்தன. இந்த முதுமக்கள் தாழி 30 செ.மீ அகலம் மற்றும் 58 செ.மீ உயரம் கொண்டது. இதில் இரண்டு மூன்று ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தன. மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது. வளையல்களானது 3.5 செ.மீ விட்டமும், 0.2 செ.மீ கன அளவும், 22 கிராம் எடையும் கொண்ட அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் நான்கு வளையங்களை கொண்டதாக உள்ளது.

இவை உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள் ஆகும். அளவைக்கொண்டு இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தையுடைய தாழியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதேபோல் மற்றொரு முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஈமத்தாழியின் உள்ளே மண்டை ஓடு, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் இருந்தது. மேலும் அதில் நான்கு ஈமப்பானைகள், 22 செ.மீ நீளமுள்ள இரும்பாலான குறுவாள், இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவை இருந்தன.

The post ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் குழந்தையின் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: வெண்கல வளையல்கள், காப்புகள் கிடைத்தன appeared first on Dinakaran.

Tags : Adhichanallur ,Karinganallur ,Adichanallur ,Thoothukudi District ,Vaikundam ,
× RELATED கீழ வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி...