×

கே.எஸ்.அழகிரி முன்னிலையில் சத்தியமூர்த்தி பவனில் இருதரப்பினர் மோதல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கக்கனுக்கு சிலை திறக்கப்பட்டது. அதற்கான கல்வெட்டு நேற்று திறக்கப்பட்டது. அதில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பெயர் இல்லை. இதனால் அவர் கக்கன் பிறந்தநாள் விழா முடிவடைந்ததும், அங்கிருந்து உடனடியாக சென்று விட்டார். அவர் சென்றதும், அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமாரை நோக்கி சென்றனர். எப்படி செல்வபெருந்தகை பெயர் இல்லாமல் கல்வெட்டு திறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், ஒரு கட்டத்தில் செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் ரஞ்சன்குமாரை நோக்கி ஆவேசமாக வந்தனர். இதையடுத்து ரஞ்சன்குமார் ஆதரவாளர்களும் வர, இருதரப்பினரிடையே கைகலப்பு எழுந்தது. இதனால் சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து கொண்டு கே.எஸ்.அழகிரி தனது அறைக்கு சென்றார். அங்கு அவர்களை சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பி கொண்டே அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினர்.

The post கே.எஸ்.அழகிரி முன்னிலையில் சத்தியமூர்த்தி பவனில் இருதரப்பினர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Satyamurthy Bhawan ,KS Alagiri ,Chennai ,Kakkan ,Satyamurthy Bhavan ,Tamil Nadu Congress ,
× RELATED பாஜ தேர்தல் அறிக்கை தமாஷ்…செல்வப்பெருந்தகை விமர்சனம்