×

அண்ணாமலையை கோமாளி என கூறியதால் செல்லூர் ராஜூவை கண்டித்து மதுரையில் பாஜவினர் போஸ்டர்

மதுரை: அண்ணாமலையை கோமாளி என கூறியதால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து தெர்மாக்கோல் விஞ்ஞானி என்று பாஜவினர் மதுரையில் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். அதை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஊழலுக்கு எதிராக தண்டனை பெற்ற முதல்வர் என்று சர்ச்சைக்குரிய வகையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு, அதிமுகவின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘அண்ணாமலை ஒரு பொம்மை. அவரை தூக்கி வைத்தால் ராஜா.

கோமாளி ஆக்கினால் கோமாளி. ஜெயலலிதாவை இழிவாக பேசியவனை சும்மா விட மாட்டோம்’ என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜ வர்த்தக பிரிவு சார்பில் நேற்று மதுரையில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், ‘வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் மாநில தலைவரை விமர்சிக்க தகுதியில்லாத, அரசியல் கோமாளியே, தெர்மாக்கோல் விஞ்ஞானியே… உன்னை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.

The post அண்ணாமலையை கோமாளி என கூறியதால் செல்லூர் ராஜூவை கண்டித்து மதுரையில் பாஜவினர் போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Madurai ,Sellur Raju ,Annamalai ,former minister ,Thermocol ,
× RELATED ‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே’...