×

உ.பி. அரசு மருத்துவமனையில் 3 நாளில் 54 பேர் உயிரிழப்பு

பல்லியா(உ.பி): உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 54 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத் திணறல், வெயில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 400 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 54 பேர் கடந்த 3 நாளில் உயிரிழந்து விட்டனர். மாவட்ட மருத்துவமனையின் பதிவுகளின்படி, “54 இறப்புகளில் 40 சதவீதம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 60 சதவீதம் பேர் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2 பேர் மட்டுமே வெப்ப நோயால் இறந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் கூறியதாவது, “தினமும் 125 முதல் 135 நோயாளிகள் வருவதால் மருத்துவமனை ஸ்டெரச்சர் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி அனுமதிக்கப்பட்ட 154 நோயாளிகளில் 23 பேர் பல்வேறு காரணங்களால் இறந்து விட்டனர். ஜூன் 16ம் தேதி 20 பேரும், ஜூன் 17ம் தேதி 11 நோயாளிகளும் இறந்து விட்டனர். அவர்கள் அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்று தெரிவித்தார்.

The post உ.பி. அரசு மருத்துவமனையில் 3 நாளில் 54 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,Ballia ,Uttar Pradesh ,Uttar Pradesh… ,U.P. ,
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...