×

அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா

ஆற்காடு: ஆற்காடு அருகே அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆற்காடு அடுத்த திமிரி அண்ணா வீதியில் பிரசித்தி பெற்ற சின்ன மலையனூராள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நேற்று இரவு மிக சிறப்பாக நடைபெற்றது. விழா முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து சிம்ம வாகினி அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

The post அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Unjal Talatu Festival ,Angalamman Temple ,Artgad ,Swami ,Unchal Talatu Festival ,
× RELATED முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்