×

அரசு கள்ளர் பள்ளிகளை கல்வித்துறையோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: பள்ளியில் குடியேறும் போராட்டம்

நிலக்கோட்டை: அரசு கள்ளர் பள்ளிகளை, கல்வித்துறையோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கோட்டை அருகே கிராம மக்கள் இரவில் பள்ளியில் குடியேறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வித்துறையோடு இணைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டுவது, சட்டமன்ற அலுவலக முற்றுகை, ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிலுக்குவார்பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டிபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பாக திடீரென திரண்ட பொதுமக்கள், இரவில் பள்ளியில் குடியேறும் நூதான போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்காக உடைகள் கொண்ட பெட்டி, பாய், தலையணை, உணவுப்பொருட்கள் மற்றும் பாத்திரங்களுடன் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திரண்டு வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன், இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் ஆகியோர் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தினால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரசு கள்ளர் பள்ளிகளை கல்வித்துறையோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: பள்ளியில் குடியேறும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nalakkotta ,Nalakotta ,
× RELATED திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே விளை...