×

மருத்துவ விழிப்புணர்வு முகாம்

காளையார்கோவில், ஜூன் 18: சிவகங்கை கோட்டம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அஸ்காட் திட்டம் விவசாயிகளுக்கான கால்நடை நோய் விழிப்புணர்வு முகாம் காளையார்கோவில் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமில் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் சரவணன் கூறியதாவது: மழை காலங்களிலும், கோடை காலங்களிலும் மாடுகளுக்கு பரவும் கோமாரி நோய் (காணை நோய்), மடிவீக்கம் நோய், அம்மை நோய், தடுப்புமுறைகள் பற்றியும், சினைபிடிக்காத மாடுகளுக்கு குடற்முழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவை, பசுந் தீவனப்புல், அடர்தீவனம் மாடுகளுக்கு அளிக்க வேண்டும். ஆடுகளுக்கு பரவும் தொண்டை அடைப்பான் நோய், துள்ளுமாரி நோய் மற்றும் மழை காலத்திற்கு முன்பு பின்பு தட்டைப் புழுக்களுக்கான மருந்தும், கோடை காலத்திற்கு முன்பு பின்பு உருண்டை நாடாப்புழுக்களுக்கான மருந்தும், குடற்புழுநீக்கம் செய்து, தடுப்பூசி போட்டு வந்தால் இந்த நோயிலிருந்து தடுக்கலாம்.

கோழிகளுக்கு பரவும் வெள்ளை கழிச்சல் நோயிலிருந்து தடுப்பதற்கு கண்டிப்பாக தடுப்பூசி மற்றும் குடற்புழுநீக்கம் அவசியம் என விவசாயி மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் திவான் பாட்ஷா, கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர்கள் தங்கமுத்து, சிலம்பரசன், தினேஷ்குமார், ரஹமத், சங்கீதா, கால்நடை ஆய்வாளர் ரோஸ்லின் செல்வம், கால்நடை உதவியாளர்கள் மனுவேல், சாமிநாதன், பருத்திக் கண்மாய் பால் உற்பத்தி குழு முத்துலெட்சுமி, ஆவின் செயற்கைமுறை கருவூட்டல் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மருத்துவ விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kalaiyarkoil ,Sivagangai Kotam Animal Husbandry Department ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் அருகே கோயில் விழாவில் வடமாடு மஞ்சு விரட்டு