×

திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல் திருவாரூர் அருகே ரூ.23 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்

திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலத்திற்கு என புதிதாக ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் கூட்ட அறை மற்றும் 2 அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அலுவலக கட்டிடமானது கட்டப்பட்டுள்ளது. இதை ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன் முன்னிலையில் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் திறந்து வைத்து பொது மக்களுக்கு வீட்டு வரி ரசீது போன்றவற்றை வழங்கினார். இதில் கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி மற்றும் சுப்புலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், ஒன்றிய குழு கவுன்சிலர் வாசு ,ஊராட்சி துணைத் தலைவர் ரேவதி செல்வம், ஊராட்சி செயலர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல் திருவாரூர் அருகே ரூ.23 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur District Collector Information ,Tiruvarur ,Thiruvarur ,Thiruvarur District Koradacherry Union Kattur Panchayat Council Office ,New Panchayat Council Office ,Dinakaran ,
× RELATED நில அபகரிப்பு வழக்கு: அதிமுகவை சேர்ந்த...