×

அசோக சக்ரா, ஜூவன் ரக்ஷா விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர், ஜூன் 18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உள்துறை சார்பில் 2023ம் ஆண்டிற்கான ஜூவன் ரக்ஷா தொடர் விருதுகள் தைரியமான மற்றும் மனிதாபிமான பணிகளை செய்து, உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர்களை காத்த நபர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் என்ற 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதத்தன்மை மிகுந்த தீர செயலான நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உயிரை காப்பாற்றிய நபருக்கு 2023ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா தொடர் விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி தகுதி வாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை 0421-2971168 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல சுதந்திர தின விழாவின்போது மத்திய அரசால் வழங்கப்படும் 2023ம் ஆண்டிற்கான அசோக சக்ரா விருது இயற்கை சீற்றம், விபத்து, தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை, தீவிரவாத ஊடுருவல் ஆகியவற்றில் இருந்து தனிப்பட்ட முறையில் பொதுமக்களை காப்பாற்றி வெளிப்படையான துணிச்சல், சுய தியாகம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்தவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பாதுகாப்பு பணியாளர்களை தவிர, அனைத்துதர குடிமக்களுக்கும், காவல் படைகள், மத்திய ஆயுத படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். தகுதி வாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும், 0421-2971168 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அசோக சக்ரா, ஜூவன் ரக்ஷா விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ashoka Sakra ,Juven Raksha ,Tiruppur ,Tiruppur District ,Collector ,Kristuraj ,Central Government ,Collector Kristaraj ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...