×

ஒடிசா ரயில் விபத்து பலி 291ஆக உயர்வு

கட்டாக்: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 291ஆக அதிகரித்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 288 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் கட்டாக் எஸ்.சி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜாய் பஸ்வான் கடந்த செவ்வாய்க்கிழமையன்றும், பிரகாஷ் ராம் என்பவர் நேற்று முன்தினமும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 290ஆக உயர்ந்தது. இந்நிலையில் எஸ்.சி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் மாநிலம் ரோஷன்பூரை சேர்ந்த சாஹில் மன்சூர்(23) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 291ஆக அதிகரித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து பலி 291ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Odisha ,train ,Koda train crash ,Odissa ,Balasore District, Odisha ,Bahanagar Bazaar ,
× RELATED பிஜு ஜனதா தள மாநில அளவிலான நிர்வாகிகளை நீக்கினார் நவீன்