×

செக் மோசடி வழக்கில் நடிகை அமீஷா படேல் நீதிமன்றத்தில் சரண்

ராஞ்சி: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை அமீஷா படேல் ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். தமிழில் நடிகர் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அமீஷா படேல் நடித்துள்ளார். இவர் குணால் குரூமர் என்பவருடன் இணைந்து டெசி மேஜிக் என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளார். இந்த படம் 2018ல் திரைக்கு வந்தவுடன் பணத்தை திருப்பி தருவதாக அமீஷா படேல் கூறியுள்ளார். ஆனால் படம் வௌியாகாததால், பணத்தை திருப்பி தரும்படி அஜய்குமார் சிங் கேட்டுள்ளார். இதையடுத்து வட்டியையும் சேர்த்து அமீஷா படேல் கொடுத்த ரூ.2.50 கோடி காசோலை பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்து விட்டது. இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அமீஷா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அமீஷா படேலுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஜூன் 21ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

The post செக் மோசடி வழக்கில் நடிகை அமீஷா படேல் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Ameesha Patel ,Saran ,Ranchi ,Bollywood ,Ranchi Civil Court ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே திருமண விவகாரம் அக்கா வெட்டி கொலை: போலீசில் தம்பி சரண்