×

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா திணறல்

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. எட்ஜ்பாஸ்டன் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 118 ரன் விளாசி அசத்தினார். கிராவ்லி 61, பேர்ஸ்டோ 78 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. வார்னர் 9, லபுஷேன் 0, ஸ்மித் 16, ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், தொடக்க வீரர் கவாஜா பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.

The post முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா திணறல் appeared first on Dinakaran.

Tags : Australia ,Birmingham ,England ,Edgbaston ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானுடன் 2வது டி20 கேப்டன் பட்லர் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி