×

உகண்டா நாட்டில் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 41 பேர் பலி

கம்பாலா: உகண்டா நாட்டில் பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியானார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு உகண்டா. இந்த நாட்டின் அருகே காங்கோ நாடு உள்ளது. இந்த இரு நாட்டிலும் இஸ்லாமிய மதவாத குழுவுடன் இணைந்த செயல்படும் ஜனநாயக கூட்டணி படை என்று அழைக்கப்படும் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதே போல் நேற்று காங்கோ நாட்டில் இருந்து 2 கிமீ தொலைவில், உகண்டா நாட்டின் எல்லையோர கிராமமான பொண்ட்வியில் உள்ள லூபிரிகா மேல்நிலைப்பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 41 பேர்கொல்லப்பட்டனர். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதி எரிக்கப்பட்டது. அங்கு இருந்த உணவு விடுதி சூறையாடப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 41 சடலங்களை மீட்டு புவேரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8 பேர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியானவர்களில் 38 பேர் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மாணவர்களை கொன்றுவிட்டு காங்கோ நாட்டில் புகுந்த பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியில் உகண்டா ராணுவம் ஈடுபட்டுள்ளது.

The post உகண்டா நாட்டில் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 41 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Uganda ,Kampala ,East Africa.… ,Dinakaran ,
× RELATED கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி