×

சீமை கருவேல மரங்களை அகற்ற குழு: ஐகோர்ட்டில் அரசு உறுதி

சென்னை: தமிழ்நாடு சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு மேலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்புக்கும் மேலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், சீமை கருவேல மரங்கள் அகற்ற குழுக்கள் அமைக்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை.

சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்துவது என்று அரசு கொள்கை முடிவு எடுத்த போதும், அதுசம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்பதால் உண்மையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றனர். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், உயர் நீதிமன்ற உத்தரவின்படி உரிய குழுக்கள் அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குழுக்கள் அமைத்தது குறித்து ஜூலை 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.

The post சீமை கருவேல மரங்களை அகற்ற குழு: ஐகோர்ட்டில் அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Committee to remove Simai ,Govt ,ICourt ,Chennai ,MDMK ,general secretary ,Vaiko ,tamilnadu ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...